தேவையானவை:
பெரிய மாங்காய் – 1,
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு – ½ டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள்-½ டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்.
செய்முறை:
மாங்காயின் தோலை சீவிவிட்டு, மாங்காயை துருவவும். கடாயில் நல்லெண்ணெய் இட்டு, கடுகு தாளித்து, மாங்காய் துருவலை போட்டு வதக்கவும். மாங்காய் குழைந்து வெந்ததும் மஞ்சள், பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இந்த தொக்கு 2 நாட்கள் வரை மட்டும் நன்றாக இருக்கும். தயிர் சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
