தேவையானவை:
ஓமவல்லி இலை – 6
மிளகு – 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி
தனியா – 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தக்காளி – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் மிளகு, துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும் தக்காளியை வேகவைத்து அதில் அரைத்தப் பொடியைப் போட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து வழக்கமான ரசம் போல் செய்யவும். பின்னர் அதனை இறக்கி ஓமவல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு 5 நிமிடம் மூடிவைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து பரிமாறவும். ஓமவல்லி ரசம் தயார்.
பலன்கள்:
சளித்தொல்லை மற்றும் மூக்கடைப்பு, மார்புசளி போன்றவற்றை குணப்படுத்தும். மேலும், அஜீரணத்தால் ஏற்படக்கூடிய வயிற்று வலி மற்றும் வாந்தியை போக்க வல்லது. உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் கூட அதனை ஓமவல்லி தீர்க்கும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது அதோடு சிறுநீரகப் பிரச்சனை, சிறுநீரகத் தொற்று நீர் கடுப்பு ஆகியவற்றை போக்க பெரிதும் உதவுகிறது.
