×

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்

தேவையானவை:

ஸ்ட்ராபெர்ரி – 2 கப்
பால் – 1/2 கப்
கன்டென்ஸ்டு மில்க் – 1 கப்
ஃப்ரெஷ் க்ரீம் – 2 கப்
லெமன் ஜூஸ் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 கப்
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, வைப்பரால் மிருதுவான க்ரீமாகும் வரை நன்கு அடிக்கவும். மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு கூழ் பதத்துக்கு அடிக்கவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி கூழ், உப்பு சேர்த்து கலந்து, ஃப்ரீசரில் 2 மணி நேரம் வைக்கவும். பிறகு ஸ்பூனால் எடுத்து நன்கு கலந்து 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து பரிமாறவும்.

Tags :
× RELATED குடைமிளகாய் குருமா