×

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை ஜோர்

நாமக்கல், ஏப்.14: தமிழ்புத்தாண்டையொட்டி, நாமக்கல் உழவர் சந்தையில், காய்கறி மற்றும் பழங்கள் அதிகளவில் விற்பனையானது. தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்ட உள்ளது. இதனை முன்னிட்டு, நேற்று நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரத்து அதிகரித்தது. கத்தரிகாய், வெண்டை, பூசணி, கேரட், தக்காளி மற்றும் ஆப்பிள், சாத்துக்குடி, வாழை உள்ளிட்ட பழங்கள் அதிகம் கொண்டு வரப்பட்டது.

இன்று தமிழ்புத்தாண்டையொட்டி காலையில் சுவாமி தரிசனத்தை முடித்து, சிறப்பு வழிபாடு நடத்துவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் வாழ்த்து கூறி, புத்தாண்டை கொண்டாடுகின்றனர். வழக்கமாக விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட நேற்று அதிகளவில் அனைத்து காய்கறிகள், பழங்கள் மற்றும் இளநீர் உள்ளிட்டவைகள் வழக்கதை விட அதிகம் விற்பனையானது.

Tags : Namakkal Farmers' Market ,Namakkal ,Tamil New Year ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு