×

பேருந்து நிலையம் அருகே இலட்சினை அணிந்து பெண்கள் விழிப்புணர்வு

நாமக்கல், ஏப்.14: நாமக்கல்லில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இலட்சினையை அணிந்து பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழகத்தில், வரும் 23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினர், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் 100 சதவீதம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் தேர்தல் நாளன்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் இலட்சினையை அணிந்தபடி பொதுமக்கள் பலர், தேர்தலில் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு மேற்கொண்டனர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Tags : Namakkal ,general elections ,Tamil Nadu ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு