×

வெற்றிலை விலை உயர்வு

பரமத்திவேலூர், ஏப்.14: பரமத்திவேலூர் சந்தையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெற்றிலை விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலை பல்வேறு மாநிலம், மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட சுமை ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை ரூ.1,500க்கும் ஏலம் போனது. நேற்று, நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை மார் 104 கவுளி கொண்ட சுமை, ரூ.9,500க்கும், கற்பூரி வெற்றிலை ரூ.6,000க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை சுமை ஒன்று ரூ.5,000கும், கற்பூரி வெற்றிலை மார் ரூ.4 ஆயிரத்திற்கும்‌ ஏலம் போனது. புத்தாண்டை முன்னிட்டு வெற்றிலை விலை உயர்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வெற்றிலை விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Paramathivelur ,Tamil New Year ,Paramathivelur market ,Namakkal district ,
× RELATED நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை ஜோர்