- பள்ளி
- குமாரபாளையம்
- குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி
- பள்ளி நிர்வாகக் குழு
- தலைவர் புவனேஸ்வரி
- ஆசிரியர்
- ரவிக்குமார்
- தலைமை ஆசிரியர்
- கௌசல்யா மணி
குமாரபாளையம், ஏப்.11: குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியின், 60வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் புவனேஷ்வரி தலைமை தாங்கி பேசினார். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கௌசல்யா மணி ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர் அருண் பங்கேற்று பேசினார். பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, கடந்த ஆண்டு பள்ளியில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டி மற்றும் இணைய வழி கல்வி வானொலி மூலம், நடத்தப்பட்ட போட்டியில் 1330 திருக்குறள்களையும் கூறிய மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர் கார்த்திகேயனி நன்றி கூறினார்.
