×

26 மண்டலங்களுக்கு தபால் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு

பரமத்திவேலூர், ஏப்.13: பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில், 26 மண்டலங்களுக்கு தபால் வாக்குகள் பெறுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன், தபால் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.தமிழ்நாட்டில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்தை தேடிச்சென்று, தபால் வாக்குகள் பதிவுசெய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 26 மண்டலங்களுக்கு தபால் வாக்குகளை பெறுவதற்காக, மண்டலங்கள் வாரியாக தபால் வாக்கு பெட்டிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணி முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தபால் வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தபால் வாக்கு சீட்டுகள், அந்தந்த மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு, அனைத்து மண்டலங்களிலும் தபால் வாக்குகள் பெறப்பட உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும், மண்டல அலுவலர் தலைமையில் மைக்ரோ அப்சர்வர், கேமராமேன், பாதுகாப்பு போலீசார் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Paramathivelur ,Assembly Constituency ,Tamil Nadu ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு