×

மேற்கு வங்கத்தில் விதிமீறல் நடந்தால் மறுதேர்தல்: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடக்கிறது. பொது​வாக தேர்தலின்​போது வன்​முறை சம்​பவங்​கள் அதிகம் நிகழ்​வது வழக்​க​ம். இந்த முறை தேர்​தல் ஆணை​யம் விதி​களை மிக தீவிரமாக அமல்​படுத்​த தயா​ராகி வரு​கிறது. விதிகளை மீறினால் மறுதேர்தல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்​பாக, வாக்​குச்​சாவடி அதி​காரி​கள் மற்றும் தலைமை அதி​காரி​களுக்​கு தேர்​தல் ஆணை​யம் தெளிவான அறி​வுறுத்​தலை வழங்கி உள்​ளது. அதாவது, ‘இந்த முறை முதன்​முறை​யாக, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வசதியுடன் கூடிய சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் வாக்​குச்​சாவடிகள் நேரலை​யாக கண்​காணிக்​கப்​படும். கேம​ராக்​கள் அணைக்கப்பட்​டாலோ அல்​லது சந்​தேகத்​துக்கு இட​மான நடவடிக்கைகள் கண்​டறியப்​பட்​டாலோ உடனடி​யாக மறு​ தேர்தலுக்கு உத்​தர​விடப்​படும்’ என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Tags : West Bengal ,Election Commission ,New Delhi ,Electoral Commission ,
× RELATED ராஜஸ்தானில் மர்ம காய்ச்சல்; 5...