- பாஜா
- ஆர்க் கர் மருத்துவமனை
- கொல்கத்தா
- ஆர்க் கார் மருத்துவமனை
- மேற்கு வங்கம்
- ஆர்ஜி கர் ஹாஸ்பிடல்
- கொல்கத்தா, மேற்கு வங்காளம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆர்ஜி கர் மருத்துவமனை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் தாய் பாஜ வேட்பாளராக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் ரத்னா தேப்நாத் பாஜ வேட்பாளராக நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் பானிஹாட்டி தொகுதியில் போட்டியிடுகின்றார். வேட்பு மனு தாக்கலின்போது முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பாஜ தலைவர்கள் உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரத்னா, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதே எனது ஒரே குறிக்கோளாகும். இந்த ஆட்சி மாற்றம் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார்.
