×

அடுத்த வாரம் நிதிஷ் குமார் ராஜினாமா பீகார் புதிய முதல்வர் சாம்ராட் சவுத்திரி? 14ஆம் தேதி தேர்வாக வாய்ப்பு

பாட்னா: பீகார் புதிய முதல்வராக பாஜவை சேர்ந்த சாம்ராட் சவுத்திரி தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் முதல்வராக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனையடுத்து, தற்போதைய துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி, பீகாரின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. சட்டப்பேரவைக் கட்சி கூட்டம் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. அப்போது நிதிஷ் குமார் பிஹார் முதல்வர் பதவியிலிருந்து விலகக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி, நிதிஷ் குமாருக்குப் பிறகு பீகாரின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ள நபராகக் கருதப்படுகிறார். இது குறித்து ஆலோசிக்க அவர் டெல்லிக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Nitish Kumar ,Samrat Chowdhury ,Bihar ,Patna ,BJP ,Chief Minister of ,Janata Dal United ,Chief Minister ,
× RELATED பாபர் மசூதி கட்டும் சர்ச்சையில்...