×

ரூ.122 கோடி மோசடி வழக்கில் வங்கியின் முன்னாள் தலைவரின் ரூ.17 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை: நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் ரிசர்வ் வங்கி நடத்திய தணிக்கையின் போது, ரூ.122 கோடி மோசடி நடந்தது தெரிய வந்தது. ​​கடந்த பிப்ரவரி மாதம் இது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில், வங்கியின் முன்னாள் பொது மேலாளரும் கணக்குத் துறைத் தலைவருமான ஹிதேஷ் மேத்தா, முக்கியக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, பொருளாதாரக் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவர் பெரும்பாலும் கொரோனா தொற்று காலத்தில், சுமார் ரூ.122 கோடியை முறைகேடாக வேறு பயன்பாட்டுக்கு திருப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கியின் செயல்பாடுகளை நேரடியாகவும், தனது கூட்டாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் வங்கி தலைவர் ஹிரன் பானுவின் தூண்டுதலின் பேரிலேயே இந்த முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை, பானுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த வழக்கில் ஹிதேஷ் மேத்தாவின் ரூ.17 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Tags : Mumbai ,Reserve Bank of India ,New India Cooperative Bank ,
× RELATED பாபர் மசூதி கட்டும் சர்ச்சையில்...