மும்பை: சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஜேக்கப் டஃபி , க்ருணால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
