×

சார்லஸ்டன் மகளிர் டென்னிஸ் ஜாலியா வென்ற யூலியா

சார்லஸ்டன்: சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனை மேடிசன் கீஸை வீழ்த்தி, உக்ரைன் வீராங்கனை யூலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில், சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த, உலகின் 18ம் நிலை வீராங்கனை மேடிசன் கீஸ், உக்ரைனை சேர்ந்த உலகின் 89ம் நிலை வீராங்கனை யூலியா ஸ்டாராடப்ட்ஸேவா உடன் மோதினார்.

இப்போட்டியில் துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய யூலியா, முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதன் மூலம், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா – இவா யோவிச் மோதினர். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் பெகுலா வசப்படுத்தினார். 2ம் செட்டில் சுதாரித்த இவா, 7-5 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து நடந்த 3வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் பெகுலா கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய பெகுலா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து, இறுதிப் போட்டியில் ஜெஸிகா பெகுலா – யூலியா மோதவுள்ளனர்.

Tags : Yulia ,Charleston Women's Tennis Open ,Charleston ,Madison Keys ,Charleston Open women's ,Charleston, USA ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு...