×

சில்லிபாயிண்ட்…

* கேண்டிடேட்ஸ் செஸ் பிரக்ஞானந்தா டிரா
பாபோஸ்: சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர், உலக செஸ் சாம்பியன் குகேஷ் உடன் மோதும் வாய்ப்பை பெறுவார். நேற்று நடந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா உடன் மோதி சிறிது நேரத்தில் டிராவில் முடித்தார். உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிண்டாரோ, சீனாவின் வெ யியை வீழ்த்தி, 6 சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். பிரக்ஞானந்தா, 3 புள்ளிகளுடன் பின்தங்கி உள்ளார்.

* ஸ்குவாஷ் போட்டியில் அபய் அமர்க்களம்
புதுடெல்லி: எல் கோனா ஓபன் ஸ்குவாஷ் ஆடவர் பிரிவு போட்டியில் இந்தியாவை சேர்ந்த, உலகின் 25ம் நிலை வீரர் அபய், எகிப்தை சேர்ந்த, உலகின் 13ம் நிலை வீரர் அலி அபோ எலெய்னென் உடன் மோதினார். அப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அபய், 9-11, 11-8, 3-11, 11-4, 11-8 என்ற புள்ளிக் கணக்கில், எலெய்னெனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் நடந்த போட்டியில், இந்தியாவை சேர்ந்த உலகின் 20ம் நிலை வீராங்கனை அனாஹத் சிங், எகிப்தை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை ஹனியா எல் ஹம்மாமியிடம் 3-1 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியேறினார்.

* மெர்சலாய் கோல்: மெஸ்ஸி அசத்தல்
மயாமி: எம்எல்எஸ் கோப்பைக்காக மயாமி நகரில் நடந்த கால்பந்து போட்டியில் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி, ஆஸ்டின் அணி மோதின. போட்டியின் 6வது நிமிடத்தில் ஆஸ்டின் அணியின் குய்ஹெர்மே பிரோ முதல் கோல் போட்டார். அதற்கு பதிலடியாக, 10வது நிமிடத்தில் பந்தை அட்டகாசமாக கடத்திச் சென்ற லியோனல் மெஸ்ஸி, சிறப்பாக கோல் போட்டார். அதைத் தொடர்ந்து 53வது நிமிடத்தில் ஆஸ்டினின் ஜெய்டன் நெல்சனும், 82வது நிமிடத்தில் இன்டர் மயாமியின் லூய்ஸ் சாரெசும் கோல் போட்டனர். அதனால், 2-2 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது.

Tags : Pragnananda Dra ,Papos ,Papos, Cyprus ,Kukesh ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு...