×

பவுலிங்கில் சிஎஸ்கே சொதப்பல் பெங்களூரு அணி வெற்றி

பெங்களூரு: ஐபிஎல் 19வது தொடரின் 11வது போட்டி, பெங்களூருவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீசியது. அதையடுத்து, பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். கோஹ்லி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது, அன்சுல் கம்போஜ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின், பில் சால்ட் உடன் தேவ்தத் படிக்கல் இணை சேர்ந்தார். இவர்கள் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

11வது ஓவரில் பில் சால்ட் (30 பந்து, 46 ரன்), சிவம் தூபேவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து, சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 50 ரன்கள் விளாசியிருந்த நிலையில், படிக்கல், ஜேமி ஓவர்டன் பந்தில் கிளீன் போல்டானார். கடைசி ஓவர்களில் டிம் டேவிட் (25 பந்து, 8 சிக்சர், 3 பவுண்டரி, 70 ரன்), ரஜத் படிதார் (19 பந்து, 6 சிக்சர், 1 பவுண்டரி, 48 ரன்), சென்னை வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து 36 பந்துகளில் 99 ரன்கள் விளாசினர்.

அதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு, 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களம் இறங்கிய சென்ன சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது.

Tags : CSK Sothapal Bangalore ,Bangalore ,IPL 19th series ,Chennai ,Bill Salt ,Virat Kohli ,Bengaluru ,Kohli ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு...