×

வங்கதேச ஊடுருவல்காரர்களை நுழைய காங்கிரஸ் அனுமதித்தது: அசாம் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜ தலைவர் நபின் குற்றச்சாட்டு

ஜாகிரோடு: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ​​வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக அசாமிற்குள் நுழைவதற்கு வழிவகுத்துக் கொடுத்ததாக பாஜ தலைவர் நிதின் நபின் குற்றம் சாட்டினார். அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மொரிகான் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது,’ ராகுல் காந்தி டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தனக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய அசாமியத் துண்டான ‘கமோச்சா’வை அணிய மறுத்ததன் மூலம், அசாம் மாநில மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார். ஆனால், அவர் மசூதிகளுக்குத் தவறாமல் சென்று, அங்கு மகிழ்ச்சியுடன் இஸ்லாமியத் தொப்பி அணிகிறார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களை நாட்டிற்குள் நுழைய அவர்கள் தான் அனுமதித்தனர். இந்த நிலையை மாற்றி அமைத்து, சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வெளியேறும் வழியைக் காட்டுவது மாநிலத்திலுள்ள பாஜ அரசுதான். பாஜ ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளில் அசாம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. அதற்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சூழலை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். தீவிரவாதம், வன்முறை, முதலீட்டாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுதல் மற்றும் இளைஞர்களின் சிதைந்த கனவுகள் ஆகியவையே அக்காலகட்டத்தின் முக்கிய பேசுபொருள்களாக இருந்தன. இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

Tags : Congress ,BJP ,Nabin ,Assam campaign rally ,JAGRODE ,Nitin Nabin ,Congress party ,Bangladeshis ,Assam ,Morigaon district ,Assam Assembly ,
× RELATED விமான எரிபொருள் விலை இரு மடங்கு உயர்வு: விமானக் கட்டணம் உயர வாய்ப்பு