- நெல்லூர் மாவட்டம்
- திருமலை
- விஜயவாடா
- திருப்பதி
- ஆந்திர
- கொம்மராபுடி ரயில் நிலையம்
- மனுபோலு, நெல்லூர் மாவட்டம்
திருமலை: நெல்லூர் மாவட்டத்தில் நேற்று 2 சரக்கு ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து திருப்பதி நோக்கி நேற்று பால் டேங்கர் சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது. நெல்லூர் மாவட்டம், மனுபோலு அருகே கொம்மரபுடி ரயில் நிலையம் பகுதியில் சென்றபோது திடீரென 2 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
இதனால் ரயில் பயணிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும், தண்டவாளங்களைச் சீரமைத்து, கவிழ்ந்துகிடந்த பால் டேங்கர் பெட்டிகளை கனரக கிரேன்களின் உதவியுடன் அகற்றும் பணிகளை மேற்ெகாண்டனர். விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
