×

பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாஜவில் இணைந்தார்

புதுடெல்லி: மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்னதாக இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாஜவில் இணைந்துள்ளார்.  பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் கடந்த 2021ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2022ம் ஆண்டு தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக அவர் பிரசாரம் செய்தார்.

ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் சமீபத்தில் கொல்கத்தாவில் பாஜ தலைவர் நிதின் நபினை லியாண்டர் சந்தித்து பேசிானர். இதனையடுத்து அவர் பாஜவில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் லியாண்டர் பயஸ் பாஜவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Tags : Leander Paes ,BJP ,New Delhi ,West Bengal ,Trinamool Congress party ,Trinamool Congress… ,
× RELATED அசாமில் காங்கிரஸ் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்