- தர்மபுரி
- தர்மபுரி பட்டு அபிவிருத்தி துறை
- தர்மபுரி நால்வர் வீதி
- பென்னாகரம்
- பாலக்கோடு
- மரந்தஹள்ளி
- ஈரோடு
- சித்தோடு
- சத்தியமங்கலம்
- கரூர்
- திருவண்ணாமலை...
தர்மபுரி, மார்ச் 29: தர்மபுரி பட்டு வளர்ச்சி துறை சார்பில், பட்டுக்கூடு ஏல அங்காடி தர்மபுரி நான்கு ரோடு அருகே செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதிகளில் இருந்தும், ஈரோடு சித்தோடு, சத்தியமங்கலம், கரூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்தும் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர். தர்மபுரி ஏல அங்காடியில், தாங்கள் கொண்டு வரும் பட்டுக் கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 57 விவசாயிகள் 3,940 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இந்தப் பட்டுக்கூடுகள் ரூ.25 லட்சத்து 39 ஆயிரத்து, 652க்கு ஏலம் போனது.
