×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு

புவனகிரி : புவனகிரி சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிப்படுத்தும் விதமாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வருவாய் துறை சார்பில் வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புவனகிரி பஸ் நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அழகிய வண்ண கோலங்களை போட்டு அசத்தினர். பின்னர் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி 100 சதவீதம் என்ற எண் வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் புவனகிரி தாசில்தார் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anganwadi ,Bhubanagiri ,Bhubanagiri Assembly Constituency ,
× RELATED சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும்...