×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்பி தலைமையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

திட்டக்குடி : திட்டக்குடியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி திட்டக்குடி சட்டமன்ற (தனி) தொகுதியில் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக திட்டக்குடியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடந்தது.

திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட வதிஷ்டபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணி தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், நெடுஞ்சாலைத்துறை வழியாக கடைவீதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று மீண்டும் தாலுகா அலுவலகம் வரை சென்றனர்.

திட்டக்குடி டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், இளவரசன், பழனிச்சாமி, செல்வநாயகம், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரம்யா சுல்தானா, சப்-இன்ஸ்பெக்டர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags : SP ,Thittakudi ,Assembly ,Separate ,Election Commission ,Thittakudi… ,
× RELATED சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும்...