சென்னை: சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல். 5 கோடி ரூபாயும் டாஸ்மாக் கடைகளில் வசூலான பணம் எனத் தகவல். டாஸ்மாக்கில் வசூலான பணம் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் ரூ.5 கோடியை பறக்கும் படை பறிமுதல் செய்தது.
சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்பத்தூர், போரூர் சாலையில் வாகன சோதனை நடைபெற்ற போது தனியார் ஏஜென்சி வாகனத்தில் சோதனை நடத்தியபோது, அதில் மூட்டை மூட்டையாக பணம் இருப்பது தெரியவந்தது.
பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததன் காரணமாக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை டாஸ்மாக் கடைகளில் வசூலான பணம் என கூறப்படுகிறது. ஆனாலும் டாஸ்மாக்கில் வசூலான பணம் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் ரூ.5 கோடியை பறக்கும் படை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இது தொடர்பாக உரிய ஆவணத்தை டாஸ்மாக் நிறுவனம் காண்பிக்கப்பட்டால் பணம் டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் பணம் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் வைக்கப்படும்.
