செங்கம் : வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று நடைபெற உள்ள பயிற்சியை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் ஆலோசனை வழங்கினார். செங்கம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று பணியில் ஈடுபட உள்ள 2181 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ராமகிருஷ்ணா பள்ளியில் இன்று நடக்கிறது.
இதனை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ள 30 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை ராமகிருஷ்ணா பள்ளியில் கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
வருவாய் துறை மற்றும் மண்டல அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு நாளில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், என்னென்ன நடைமுறைகள் உள்ளத, அதனை முழுமையாக செயல்படுத்தி இந்த மாவட்டத்தில் சிறப்பாக தேர்தல் நடத்திட நீங்கள் அனைவரும் நன்கு பணியாற்றி ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
அப்போது செங்கம் சட்டமன்றத் தேர்தல் அலுவலர் இளவரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், உதவி தேர்தல் அலுவலர்கள் முருகன், தேன்மொழி, துணை வட்டாட்சியர்கள் திருநாவுக்கரசு, வாலீஸ்வரன், தமிழரசி, ஜெயபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவானந்த், வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
