×

கலை நிகழ்ச்சிகளுடன் தேர்தல் திருவிழா இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்

*மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி, கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சார்பில் தேர்தல் திருவிழா, தமிழகத்தின் திருவிழா தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026, என் வாக்கு என் உரிமை, நமது இலக்கு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் பேரணி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள், கலை நிகழ்ச்சிகளுடன் பேரணியாக சென்றனர்.

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, தாசில்தார் பிரகாஷ், விருத்தாசலம் ஆணையர் நாகராஜ் மற்றும் வருவாய்த் துறையினர், நகராட்சியினர், கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், 100% வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதில் முக்கிய நோக்கம் என்னவென்றால் 18 மற்றும் 19 வயதுடைய முதல் வாக்குப்பதிவு செய்யும் இளம் வாக்காளர்களை வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை பறக்கும் படையினரால் ரூ.80 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் முறையான ஆவணங்கள் தெரிவித்தால் அவர்களுக்கு உடனடியாக திருப்பி வழங்கப்பட்டும் வருகிறது. பணத்தை சொந்த செலவுக்காக எடுத்துச் செல்லும் போது தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய அறிவுரைகளின்படி எடுத்துச் செல்ல வேண்டும், என்றார்.

Tags : festival ,Virudhachalam ,Virudhachalam Municipality ,Kolanjiappar Government Arts College ,Election Festival ,Tamil ,Nadu ,Tamil Nadu Legislative Assembly General Election 2026 ,
× RELATED சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும்...