×

அரியலூர் மாவட்டத்தில் மார்ச் 31ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

அரியலூர், மார்ச் 28: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31 (செவ்வாய்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர் தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : TASMAC ,Ariyalur district ,Ariyalur ,Collector ,Rathinasamy ,Tamil Nadu State Chamber of Commerce ,
× RELATED அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டும் பணி