×

பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி

தேன்கனிக்கோட்டை, மார்ச் 27: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் முகளூர், கொப்பகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், வித்யூ கல்வி அறக்கட்டளை சார்பில் பொம்மலாட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் பொம்மலாட்ட பயிற்சியாளர் ரமேஷ்குமார், பொம்மைகள் செய்வது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இரண்டு பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொம்மைகள் செய்து காண்பித்து பயிற்சி பெற்றனர். பயிற்சி வகுப்பில் முகளூர் பள்ளி தலைமை ஆசிரியர் கனகம், கொப்பகரை தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, பள்ளி ஆசிரியர்கள், வித்யூ கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thenkanikottai ,Vidyu Education Foundation ,Kelamangalam Union ,Mugalur ,Koppakarai Panchayat Union ,Krishnagiri ,Ramesh Kumar ,
× RELATED ரூ.10 லட்சம் குட்கா காருடன் பறிமுதல்