×

ரூ.10 லட்சம் குட்கா காருடன் பறிமுதல்

ஓசூர், மார்ச் 24: சூளகிரி அருகே, வாகன தணிக்கையின் போது ரூ.10 லட்சம் குட்காவை காருடன் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி சாமல்பள்ளம் பகுதியில். சூளகிரி இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரியை நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தினர். அப்போது, காரை நிறுத்திய டிரைவர், திடீரென தப்பியோடி விட்டார். அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. பின்னர், போலீசார் நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Hosur ,Choolagiri ,Choolagiri Chamalpallam ,Hosur, Krishnagiri district ,Inspector ,Angappan ,
× RELATED வாகன சோதனையில் ரூ.1.51 லட்சம் பறிமுதல்