தேன்கனிக்கோட்டை, மார்ச் 24: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதி அஞ்செட்டி பஸ் நிலையத்தில், பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவர், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.53,700 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பணத்தை உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று கொள்ளும்படி தெரிவித்து, தேன்கனிக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அதே போல், தளி அருகே, கும்மளாபுரம் சோதனை சாவடியில், பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், பெங்களூரு சந்தாபுரம் ஆகில்நாயர் (39) என்பவரிடம் இருந்து, உரிய ஆவணங்களில்லாத ரூ.97,500ஐ பறிமுதல் செய்தனர். நிலம் வாங்க பணத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்த பணத்தை உரிய ஆவணங்கள் காண்பித்து, பெற்று கொள்ளும்படி பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
