×

காளான் விலை உயர்வு

போச்சம்பள்ளி, மார்ச் 24: போச்சம்பள்ளி பகுதியில், 3 பாக்கெட் காளான் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் காளான் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் காளான்களை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் வியாபாரிகள் விலை பேசி மொத்தமாக வாங்கி சென்று மளிகை, பல்பொருள் அங்காடி, பேக்கரி கடைகளில் விற்பனை செய்கின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் காளானுக்கு மவுசு அதிகம் என்பதால், அதிகளவில் சமையலுக்கு காளான் தேவைபடுகிறது. இதனால் கடை உரிமையாளர்கள், ஒரு பாக்கெட் ரூ.50க்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், முகூர்த்த சீசன் இல்லாததால் காளான் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதனால் விலையும் நாளுக்கு நாள் குறைந்தது. தொடக்கத்தில் 5 பாக்கெட் ரூ.100க்கு விற்ற நிலையில், தற்போது 3 பாக்கெட் காளான் ரூ.100க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

Tags : Pochampally ,Krishnagiri district ,
× RELATED ரூ.10 லட்சம் குட்கா காருடன் பறிமுதல்