கிருஷ்ணகிரி, மார்ச் 23: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த தொட்டேகானப்பள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சு(32). இவரும், அதே பகுதியை சேர்ந்த முரளி(28) என்பவரும் உறவினர்கள். இவர்களிடையே, நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த 20ம் தேதி இரவு, முத்துமாரியம்மன் கோயில் அருகில் நடந்த பிரச்னையில், மஞ்சுவை முரளி தரப்பினர் கையால் தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த முரளி, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மஞ்சு கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி முரளி(28), விஜயன் (20), சுதீப்(24), திம்மராயன்(53) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் லோகேஷ்(31) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல், லோகேஷ் தான் தாக்கப்பட்டதாக ஒரு புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கங்கேஷ்(43), மஞ்சு(32), சுந்தரம்(27) ஆகிய 3பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
