ராயக்கோட்டை, மார்ச் 27: ராயக்கோட்டை பகுதியில் புளி மரங்கள் அதிகம் உள்ளதால், தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. மரங்களில் காய்த்து தொங்கும் புளியை உலுக்கி பறிக்க கூலியாக, ஒரு நாளைக்கு ரூ.1500க்கும் மேலாக கேட்பதாலும், உலுக்கி கீழே விழும் புளியை பெருக்கி எடுக்க பெண்களுக்கு தினக்கூலி ரூ.500 கேட்பதாலும், புளிய மரங்களை குத்தகைக்கு பிடித்துள்ள வியாபாரிகள், சில விவசாயிகள் பறிக்காமல் மரத்திலேயே விட்டு வைத்துள்ளனர். நடப்பாண்டு விளைச்சல் அதிகரிப்பாலும், விற்பனைக்கு வரத்து அதிகரிப்பாலும், கடந்த ஆண்டை காட்டிலும் விலை குறைந்து வருகிறது. அதோடு புளியை நசுக்கி, சமையலுக்கு தயார்படுத்தும் பெண் தொழிலாளர்கள் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டதால், ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் கொட்டைப்புளி விலை குறைந்து வரும் நிலையில், சமையல் புளி விலை குறையாமல் உள்ளது.
