×

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளபட்டியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி, மார்ச் 25: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பள்ளப்பட்டி பகுதியில் கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் 100% வாக்களிக்க வழியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைமூலம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

வாக்களாருகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் தடைசெய்யப்பட்ட போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி கிராமிய கலைகுழுவினரால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், கரூர் கோட்ட கலால் அலுவலர் அமுதா, பள்ளப்பட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நுஸ்ரத் பானு, பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகிலா, பள்ளப்பட்டி நகராட்சி மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

 

Tags : Pallapatti ,Aravakurichi ,Aravakurichi Assembly ,Karur district ,Prohibition and Excise Department ,
× RELATED வேலாயுதம்பாளையம் பகுதியில் தேர்தல்...