- பெண்கள் விரைவு அதிரடிப்படை
- கரூர்
- கரூர் மாவட்டம்
- கரூர் மாவட்ட ஆயுதப்படை
- கண்காணிப்பாளரை
- ஹரி கிரண்பிரசாத்
கரூர், மார்ச். 21: கரூர் மாவட்டம் கரூர் மாவட்ட ஆயுதப்படையிலிருந்து 10 பெண் காவலர்களைக் கொண்டு புதியதாக பெண்கள் அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதியபடையை நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன்பிரஷாத் தொடங்கிவைத்தார். பெண்கள் அதிவிரைவுப்படை காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்ட காவல் நிலையங்களில் பெண்கள் அதிகமாக வந்து செல்லும் பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் காவலன் உதவி ஆப்பை பதிவிறக்கம் செய்து பிரச்சனை ஏற்படும்போது தெரிவிக்கவேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
