×

கரூர் நொய்யல் அருகே ஆவணம் இல்லாத ரூ.55 ஆயிரம் பறிமுதல்

வேலாயுதம்பாளையம். மார்ச் 25: கரூர் நொய்யல் அருகே ஆம்னி வேனில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த ரூ.55 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் 134, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நொய்யல் சோதனை சாவடியில் நேற்று நண்பகல் சுமார் 1.15 மணியளவில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கொடுமுடியிலிருந்து கரூர் நோக்கி வந்த ஆம்னி வாகனத்தை மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர். அதில் ஈரோடு மாவட்டம் ரோஜா நகர், கொடுமுடியைச் சேர்ந்த அப்ஜல் என்பவர் ஆவணங்களின்றி ரூ.55,000 சோதனையில் கண்டறியப்பட்டு மேற்படி பறிமுதல் செய்தனர். அரவக்குறிச்சி தேர்தல் அலுவலரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட பணம் அரவக்குறிச்சி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags : Karur Noyyal ,Velayudhampalayam ,Noyyal ,Aravakurichi ,Karur district 134… ,
× RELATED வேலாயுதம்பாளையம் பகுதியில் தேர்தல்...