கரூர், மார்ச் 21: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026யை முன்னிட்டு தேர்தல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 நடைபெறவுள்ளது. இதையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பேரணிகள், கோலங்கள், வாக்காளர் உறுதி மொழி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிளை நடத்திவருகிறது. அந்த வகையில் 135-கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சத்துணவு உதவியாளர்களின் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய கோலங்களை வரைந்திருந்தனர். மேலும் பள்ளப்பட்டி நகராட்சி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
