×

வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை

வேலாயுதம்பாளையம், மார்ச். 23: வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி புகளூர் தாலுகாவில் நேற்று வாகன சோதனை நடந்தது. வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமை வகித்தார்.

நொய்யல் குறுக்குசாலை பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே ஈ வந்த கார்கள், வேன்கள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. வாகனத்திற்குள் உரிய ஆவணங்கள் உள்ளதா? தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் நடவடிக்கை உள்ளதா? என்பதுகுறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்

 

Tags : Velayudhampalayam ,Pugalur taluka ,Aravakurichi ,Police Inspector ,Gopi ,Noyyal Crossroads ,
× RELATED கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில்...