×

துவரங்குறிச்சி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடித்த தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விடப்பட்டது

 

துவரங்குறிச்சி,மார்ச் 21: துவரங்குறிச்சி அருகே 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பாலக்குறிச்சி சொக்கநாதபட்டி அருகில் தோட்ட பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட தோட்டத்தின் உரிமையாளர் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரக்கிளையில் இருந்த மலைப்பாம்பை போராடி பிடிப்பான் உதவியுடன் பிடித்தனர்.

Tags : Dhuvarankurichi ,Sokkanathapatti, Palakurichi ,Trichy district ,
× RELATED மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில்...