- தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா
- முசிறி
- கலெக்டர்
- சுஸ்ரீ சுவாங்கி குந்தியா
- மதுரை
- Thottiyam
- திருச்சி மாவட்டம்
முசிறி, மார்ச் 21: தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு முசிறி சப் கலெக்டர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழா சிறப்பாக நடைபெற முசிறி சார் ஆட்சியர் தலைமையில் முசிறி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி சப்-கலெக்டர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமை வகித்தார். தொட்டியம் தாசில்தார் லஜபதி ராய், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வனஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
