×

வாழை மரங்களை சூறையாடிய ஒற்றை காட்டு யானை

 

பெ.நா.பாளையம், மார்ச் 21: தடாகம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை வாழை மரங்களை முறித்து சூறையாடியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், மாங்கரை, பன்னீர்மடை, குருடம்பாளையம், ஆகிய கிராமங்களில் காட்டு யானை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மனித உயிர்க்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு தடாகம் அருகே உள்ள மடத்தூர் புதூர் பகுதிக்குள் ஒன்றை காட்டு யானை ஒன்று நுழைந்தது. அந்த பகுதியில் இருந்த விவசாயி ஒருவரின் தோட்டத்துக்குள் புகுந்தது. சுமார் இரண்டு ஏக்கர் அளவில் வாழை பயிரிடப்பட்டு இருந்த நிலையில் காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை கீழே தள்ளி சூறையாடியது.

Tags : P.N. Palayam ,Anaikatti ,Nanjundapuram ,Mangarai ,Panneermadai ,Kurudampalayam ,Western Ghats ,Coimbatore ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சொந்த...