கோவை,மார்ச்21: கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் கூடங்கள், பவுண்டரிகள், தேயிலை தோட்டங்கள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில், லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.குறிப்பாக அசாம், மேற்குவங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதியும், மேற்கு வங்க மாநிலத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால், அம்மாநில தொழிலாளர்கள் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால்,அம்மாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.இதேபோல மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் அடுத்த மாதம் துவக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளார்கள்.
