×

ஒத்தக்கால் மண்டபம் மேம்பாலம் அருகே இயங்காத சிக்னலால் விபத்து ஏற்படும் அபாயம்

 

மதுக்கரை, மார்ச் 21: கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும்போது, ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி ரயில்வே கேட் ஆகிய 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது. ஆனால் அந்த மேம்பாலங்கள் அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வீஸ் ரோடு குறுகலாகவும், போதிய மின் விளக்கு மற்றும் பாதுகாப்பு வசதி இல்லாததால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் மேம்பாலங்கள் அருகில் உள்ள சர்வீஸ் ரோடுகளில், சிக்னல் அமைத்து, மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, ஒத்தக்கால் மண்டபம் மேம்பாலத்தின் அருகில் மட்டும், சர்வீஸ் ரோட்டின் இரு புறமும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

Tags : Othakakal Mandapam ,Madukkarai ,Coimbatore-Pollachi National Highway ,Kinathukadavu ,Mullupadi Railway Gate ,
× RELATED வாழை மரங்களை சூறையாடிய ஒற்றை காட்டு யானை