×

நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சௌந்தர்யா தலைமையில் நேற்று முன்தினம் புஞ்சை புளியம்பட்டி வார சந்தை பகுதியில்அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் அலுவலர் மோகன்குமார், புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், வேட்பாளர் சௌந்தர்யா, நிர்வாகிகள் மகேஸ்வரன், முருகேசன், செல்வராஜ், திருமூர்த்தி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணைக்கு அழைத்தனர். இதை கண்டித்து நாதகவினர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன்பு காவல்துறையை கண்டித்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Nathak ,Naam Tamilar Party ,Soundarya ,Bhavanisagar ,Assembly ,Erode district ,Puliyampatti, Punjai ,Mohan Kumar ,
× RELATED மினி ஜவுளி பூங்காக்கள்; சொன்னாரு..! செஞ்சாரு..!!