×

அண்ணாமலை ரகசிய ஆலோசனை தலைமை டோஸ்

 

பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் பெற்று வெற்றி பெற வேண்டும் என தனது ஆதரவாளர்களிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசிய ஆலோசனை நடத்தினார். தனது தீவிர விசுவாசியான முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வீட்டில் ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளை அழைத்து தான் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி அடைய முடியும் என கேட்டுள்ளார். இதனை சிலர் நிர்வாகிகள் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் அண்ணாமலையுடன் நின்று போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த தகவல் மற்றும் போட்டோக்கள் கட்சி மேலிடத்திற்கு சென்றுள்ளது. உடனே இது குறித்து அண்ணாமலையிடம் விசாரித்து டோஸ் விட்டுள்ளனர். அதற்கு அவர் தான் மரியாதை நிமித்தமாக பாலாஜி உத்தம ராமசாமி வீட்டிற்கு சென்றதாகவும், அதனை தெரிந்து தொண்டர்கள் வந்து போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் கூறி சமாளித்ததாக கூறப்படுகின்றது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Tags : Annamalai ,BJP ,president ,Coimbatore ,DMK ,
× RELATED ஒரிஜினல் பாஜ, டூப் அதிமுக பொம்மலாட்ட...