×

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் கசமுசா உல்லாச வீடியோ டாக்டருக்கு அதிமுக கூட்டணியில் சீட்டா? தேஜ கூட்டணியில் கொந்தளிப்பு

 

தேனி மாவட்டம் ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்து தற்போது, ஓட்டையாக மாறி விட்டது. இங்குள்ள பெரியகுளம் தொகுதியில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் கதிர்காமு. டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் எம்எல்ஏ பதவி இழந்த 18 பேரில் இவரும் ஒருவர். இதன் பிறகு 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் டாக்டர் கதிர்காமு, டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவரது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணோடு டாக்டர் கதிர்காமு உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் அத்தேர்தலில் டாக்டர் கதிர்காமு டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2021 தேர்தலிலும் அமமுக சார்பில் பெரியகுளத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். தற்போது அமமுக, தேஜ கூட்டணியில் கூட்டணி இணைந்துள்ளது. இதனால் இம்முறை அமமுக போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என்ற மனநிலையில் டிடிவி.தினகரன் உள்ளார். தனக்காக எம்எல்ஏ பதவியை இழந்த டாக்டர் கதிர்காமுவிற்க்கு மீண்டும் சீட்டு வாங்கி கொடுத்து வெற்றி பெற வைத்து எம்எல்ஏ ஆக்குவது தனக்கான பிராயசித்தமாக இருக்கும் என கருதுகிறார். இதனால் தனது விருப்பத் தொகுதியில் முதன்மையானதாக பெரியகுளத்தை டாக்டர் கதிர்காமுவுக்காக கேட்டுள்ளார். இவர்தான் இம்முறை நிற்கப் போகிறார் என்ற பேச்சு, இம்முறை பலமாக எழுந்துள்ளது.

டாக்டர் கதிர்காமுவும் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜ நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். அமமுக சார்பில் போட்டியிட்டபோது டாக்டருக்கு எதிராக வீடியோ விவகாரத்தை வைத்து, அதிமுகவினர் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டனர். தற்போது தங்களது கூட்டணிக்கே வந்து வேட்பாளராக நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டால் அவருக்காக சென்று ஓட்டு கேட்க வேண்டுமே? எந்த முகத்தை வைத்து, அவருக்காக பிரசாரம் செய்ய செல்வது என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர். மேலும், தலைமையிடம் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும். கூட்டணிக்கு ஒதுக்கினால் டாக்டர் கதிர்காமுவை தவிர்த்து வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என விடாப்பிடியாக வலியுறுத்தி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க, ‘அமமுகவுக்கு தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அல்லது வேறு தொகுதி தருகிறோம். வேட்பாளராக டாக்டர் கதிர்காமுவை மட்டும் நிறுத்த வேண்டாம்’ என எடப்பாடி தரப்பில் டிடிவி தரப்பினரிடம் கூறப்பட்டுள்ளது. ‘பழைய விவகாரத்தை கிளறாதீங்க… பெரியகுளத்துல அவர்தான் நிற்பாரு… பிடிக்காதவங்க வேலை செய்யாதீங்க…’ என டிடிவி தரப்பு உஷ்ணமாகி விட்டதாம். இதனால் தேனி மாவட்ட தேஜ கூட்டணியில் குழப்ப நிலைநிலவுகிறதாம்….

 

Tags : Kasamusah ,AIADMK alliance ,Teja alliance ,Theni district ,AIADMK ,Dr. ,Kathirgamu ,2016 assembly elections ,Periyakulam ,TTV.Dhinakaran… ,
× RELATED ஒரிஜினல் பாஜ, டூப் அதிமுக பொம்மலாட்ட...