×

மினி ஜவுளி பூங்காக்கள்; சொன்னாரு..! செஞ்சாரு..!!

 

செஞ்சாரு: தமிழகத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. பாரம்பரிய நெசவுத் தொழிலை நவீனப்படுத்துவதற்கும், சிறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கும் திமுக தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக ‘மினி ஜவுளிப் பூங்கா’ திட்டத்தை முன்னெடுத்தது. இத்திட்டம் ‘ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களை’ விட சிறிய அளவில், உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டம் தமிழக சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக குறைந்த முதலீட்டில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் வேலைவாய்ப்பை பெருக்குதல், நெசவு, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தியை உலகத் தரத்திற்கு உயர்த்துதல் போன்றவை அடங்கும். ஒரு மினி ஜவுளிப் பூங்கா அமைக்க அரசு பல்வேறு விதிகளை வகுத்துள்ளன. குறிப்பாக, குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.

3 தொழில் முனைவோர்கள் கொண்ட குழுவாகவோ கூட்டுறவு சங்கமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவோ இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். தமிழகம் முழுவதும் இதுவரை 50க்கும் மேற்பட்ட குழுக்கள் இத்திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்க ஆர்வம் காட்டியுள்ளன. இதில் 15க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மினி ஜவுளிப் பூங்காவிலும் குறைந்தபட்சம் 100 முதல் 300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஜவுளித்துறையில் 70 சதவீத பங்கு வகிக்கும் பெண் தொழிலாளர்களுக்கு, தங்கள் வீட்டின் அருகிலேயே வேலை கிடைப்பதால் பெரும் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருவதற்காக பல்வேறு ஜவுளி அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திராவிட மாடல் அரசுக்கும் முதல்வருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளன. முன்பு கூலிக்கு நெய்து கொண்டிருந்த பல நெசவாளர்கள், தற்போது இத்திட்டத்தின் கீழ் சிறு குழுக்களாக இணைந்து தங்களே உரிமையாளர்களாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. இது ‘உழைப்பவர் கையில் மூலதனம்’ என்ற சமூக நீதிப் பார்வையில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ‘மினி ஜவுளிப் பூங்கா’ திட்டம் வெறும் காகித அளவில் இல்லாமல், களத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. இது தமிழகத்தின் தொழில் புரட்சியில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Centjaru ,Tamil Nadu ,Dimuka ,
× RELATED ஒரிஜினல் பாஜ, டூப் அதிமுக பொம்மலாட்ட...