- அல்வா
- திமுக
- காங்கிரஸ்
- கில்லியூர்
- விளவங்கோடு
- Kulachal
- பத்மநாபபுரம்
- வைகுந்தத்தின்
- Alankulam
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- காரைக்குடி
- தென்காசி
- திருவாடானை
- முதுகுளத்தூர்
- நாங்குநேரி
- ஊத்தங்கரை
- முசிறி
- நெல்லை
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் காங்கிரஸ் தற்போது கேட்டுள்ள உத்தேச பட்டியலில், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், வைகுண்டம், ஆலங்குளம், விருதுநகர், ராமநாதபுரம், காரைக்குடி, தென்காசி, திருவாடனை, முதுகுளத்தூர், நாங்குநேரி, ஊத்தங்கரை, முசிறி, நெல்லை, மணப்பாறை, சோளிங்கர், சிதம்பரம், மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு, வேடசந்தூர், மதுரை மத்தி, கோவை தெற்கு, மதுராந்தம் (தனி), கலசப்பாக்கம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, வேளச்சேரி, எழும்பூர்(தனி), பொன்னேரி(தனி), மயிலாடுதுறை, கூடலூர்(தனி), கும்பகோணம், உதகை, சிவகாசி, விருதாச்சலம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் அல்வா மாவட்டமான நெல்லையை பொறுத்தவரை நாங்குநேரி, நெல்லை ஆகிய இரு தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதுபோல் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி ஆகிய இரு தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக போட்டியிடும் 3 இடங்களும் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருக்க வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரசில் நாங்குநேரி, நெல்லை மற்றும் ஆலங்குளம் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
