×

மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கண்களுக்கு விருந்து சிறுவாணி அணை சீரமைப்பு பணி

கோவை, மார்ச் 20: கோவை சிறுவாணி அணை சீரமைப்பு பணி தொடர்பாக விரைவில் இரு மாநில குடிநீர் வாரிய அதிகாரிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் பக்க சுவர் சீரமைப்பு பணிகள் நடத்த நீர் தேக்கம் தடையாக இருப்பதாக தெரிகிறது. நீர் மட்டம் குறைந்த பின்னர் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், நீர்க்கசிவை தடுப்பதற்கு மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு நடத்தினர். அணை 22.60 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது.

அணையில் 15 மீட்டர் ஆழத்திற்கு நீர் தேக்கி வைக்க முடியும். அணை கட்டி 90 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பக்க சுவரில் நீர் கசிவு கணிசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை தடுக்க பல்வேறு கால கட்டங்களில் சிமெண்ட் கலவையை பிரஷர் முறையில் செலுத்தினர். ஜெர்மன் டெக்னாலஜியிலும் நீர் கசிவு தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் நீர் கசிவு தடுக்க முடியவில்லை. கசிவு அதிகரித்து அணையில் விரிசல் ஏற்படும் அச்சம் காணப்பட்டது. இந்த நிலையில் அணையில் முழு அளவில் நீர் தேக்க தேசிய அணை பாதுகாப்பு கமிட்டி உத்தரவிட்டது. 1.5 மீட்டர் உயரம் குறைத்து நீர் தேக்க உத்தரவு வழங்கப்பட்டது.

அணையின் நீர் மட்டம் உச்சத்தில் இருக்கும் போது அடிக்கடி நீர் திறப்பு நடக்கிறது. தற்போது அணை நீர் மட்டம் குறைந்து வருகிறது. 19 அடி உயரத்திற்கு நீர் தேக்கம் இருக்கிறது. இன்னும் நீர் மட்டம் குறையும் போது பக்க சுவரை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாத காலத்தில் அணை பராமரிப்பு, பட்ஜெட் கூட்டம் நடத்தப்படும். நடப்பாண்டில் தேர்தல் நடப்பதால் கூட்டு கமிட்டியின் கூட்டம் நடத்தப்படுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கோவை குடிநீர் வாரியத்தினர் கேரள அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி சீரமைப்பு பணிக்கான முடிவுகளை எடுக்கவுள்ளனர்.

Tags : Mettupalayam government ,Siruvani ,Coimbatore ,
× RELATED அரசு மரக்கிடங்கு மத்திய நாற்றங்கால் பண்ணையில் வன அதிகாரி ஆய்வு