- உலக கோப்பை
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- வாவ்ரி
- வேல்ஸ்
- ஐபிஎச் உலகக் கோப்பை
- FIH உலகக் கோப்பை
- வேவரி, ஆம்ஸ்டெல்வீன், பெல்ஜியம்
வாவ்ரி: எப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி முதல் போட்டியில் இந்திய அணி, வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஆக. 19ம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதவுள்ளது. எப்ஐஎச் உலகக்கோப்பை ஹாக்கி ஆடவர் போட்டிகள், பெல்ஜியம் நாட்டின் வாவ்ரி, ஆம்ஸ்டெல்வீன் நகரங்களில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. குரூப் டி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கும் தனது முதல் போட்டியில் வேல்ஸ் அணியுடன் மோதுகிறது. பின்னர், ஆக. 17ல் இங்கிலாந்து அணியுடனும், ஆக. 19ம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் மோதவுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆடுவதற்கான தகுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் இம்முறை, தகுதி பெற்று உலகக் கோப்பையில் ஆடவுள்ளது. உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை, 5 முறை மோதியுள்ளன. அவற்றில் 3 முறை இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. அதில் ஒன்றாக, கடந்த 1975ம் ஆண்டு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆக.16ல் இந்திய மகளிர் சீனாவுடன் மோதல்
16வது எப்ஐஎச் உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிகளும், பெல்ஜியம் நாட்டின் வாவ்ரி நகரிலும், நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரிலும் வரும் ஆகஸ்ட் 14 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில், இந்திய மகளிர் அணி, வரும் ஆகஸ்ட் 16ம் தேதி தனது முதல் போட்டியில் சீன மகளிருடன் மோதுகின்றனர். பின்னர், ஆக. 18ம் தேதி நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்காவையும், ஆக. 20ம் தேதி நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியையும் இந்திய மகளிர் எதிர்கொள்கின்றனர்.
