×

ஆசிய மகளிர் கால்பந்து: பிலிப்பைன்ஸ் அபார வெற்றி; 2027 உலகக்கோப்பைக்கு ஆட தகுதி

ரூபினா: ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில் பிலிப்பைன்ஸ் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தியதை அடுத்து, உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. ஏஎப்சி ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியாவின் ரூபினா நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த பிளே ஆப் சுற்று போட்டியில் பிலிப்பைன்ஸ் – உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் பிலிப்பைன்ஸ் அணி வீராங்கனைகள் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தினர். அந்த அணியின் ஏஞ்சலா பியர்ட், 47வது நிமிடத்தில் போட்டியின் முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து 52வது நிமிடத்தில் அதே அணியின் ஜேக்லின் ஸாவிக்கி மேலும் ஒரு கோல் போட்டு அணியை பலப்படுத்தினார். அதன் பின் இரு அணி வீராங்கனைகளால் கோல் எதுவும் போட முடியவில்லை. அதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து, வரும் 2027ல் பிரேசில் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகளில் ஆட பிலிப்பைன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அதேபோல், ஆசிய கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகளும், பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகளில் ஆட தகுதி பெற்றுள்ளன.

Tags : Asian Women's Football ,Philippines ,2027 World Cup ,Rubina ,Philippines women's football team ,Uzbekistan ,Asian Women's Football Championship ,AFC Asian Cup Women's Football Competitions… ,
× RELATED உலக கோப்பையில் தடுமாறியபோது யுவராஜ்...